தேசிய செய்திகள்

ராகுல் காந்தி ஒரு 'போலி காந்தி' - மத்திய மந்திரி காட்டம்

ராகுல் காந்தி மகாத்மாவின் வழித்தோன்றல் அல்ல என்றும் ஒரு ‘போலி காந்தி’ என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து டெல்லியில் நேற்று காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.

அத்துடன் அவர் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது அவர், 'ராகுல் காந்தி ஒன்றும் மகாத்மா காந்தியின் வழித்தோன்றல் அல்ல. அவர் ஒரு போலி காந்தி' என காட்டமாக பதிலளித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது