தேசிய செய்திகள்

'அக்னிபத்' வீரர்களுக்கு கிடைக்காவிட்டால் எனது ஓய்வூதியத்தை விட்டுத்தர தயார் வருண்காந்தி அறிவிப்பு

‘அக்னிபத்’ திட்டத்தில் வெறும் 4 ஆண்டுகால பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் பெற தகுதி இல்லையாம்.

தினத்தந்தி

புதுடெல்லி, ஜூன்.25-

பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி நேற்று தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

'அக்னிபத்' திட்டத்தில் வெறும் 4 ஆண்டுகால பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம் பெற தகுதி இல்லையாம்.அப்படியானால், மக்கள் பிரதிநிதிகளுக்கு எதற்கு இந்த சலுகை? நான் எனது சொந்த ஓய்வூதியத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேன்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓய்வூதியத்தை விட்டுக்கொடுத்து, அக்னிவீரர்கள் ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்ய முடியாதா?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது