தானே,
தானே மாவட்டத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே அங்கு கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வில்லா ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வருகிற 31-ந் தேதி வரை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வு இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேகர் கூறுகையில், கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்படுகிறது. மாநில அரசின் வழிகாட்டுதல்கள் தானே புறநகர், நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கும் பொருந்தும். கட்டுப்பாட்டு பகுதிகள் என கண்டறியப்பட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகரங்கள், டவுண் பகுதிகளில் 31-ந் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்றார்.
இதற்கிடையே தானே மஜிவாடா-மான்பாடா பகுதியில் 132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி துணை கமிஷனர் சந்தீப் மாலவி கூறினார். இதில் 86 பேர் அங்குள்ள கட்டுமான பணிகள் நடந்து வரும் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் ஆவர்.