தேசிய செய்திகள்

இந்திய குடியரசு தினம் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கவில்லை

அத்துமீறி தொடர் தாக்குதல் நடத்துவதால் இந்தியா சார்பில் இன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கப்படவில்லை. #RepublicDay

புதுடெல்லி,

இந்தியாவில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது பாகிஸ்தானுக்கு இனிப்பு வழங்குவது வழக்கத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியா- பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் தினமும் அணிவகுப்பு நடத்தும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா சார்பில் இனிப்பு வழங்கப்படும்.

இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு வாகா எல்லை பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா சார்பில் இன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கப் படவில்லை.

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லையை தாண்டி வந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியா தரப்பில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்யவே அந்நாட்டு ராணுவம் இத்தகைய தாக்குதலை திட்டமிட்டு நடத்துகிறது. இதனால் எல்லையில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் பாகிஸ்தானுக்கு இந்தியா தரப்பில் இன்று இனிப்பு வழங்கப்படவில்லை.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்