தேசிய செய்திகள்

விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் - வைகோ நேரில் ஆதரவு

விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு வைகோ நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்களையும், எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக இந்த பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதேபோல் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி. மற்றும் மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ஆகியோரும் விவசாயிகளை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்றும்(புதன்கிழமை) நடைபெற உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு