தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்ட பணிகள்; அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி உத்தரகாண்டில் ரூ.17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 23 திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி உத்தரகாண்டில் உள்ள ஹல்த்வானி பகுதிக்கு இன்று நேரில் செல்கிறார். அவர் ரூ.17 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 23 திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். அவற்றில் ரூ.14 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான 17 திட்ட பணிகளும் அடங்கும்.

இந்த பணிகளில் நீர்ப்பாசனம், சாலை, வீட்டு வசதி, சுகாதார உட்கட்டமைப்பு, தொழிற்சாலை, சுகாதாரம், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட மாநிலம் முழுவதற்கும் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இவற்றில் ரூ.5,750 கோடி மதிப்புடைய லக்வார் பன்னோக்கு திட்டம், ரூ.8,700 மதிப்பிலான பல்வேறு சாலை பிரிவு திட்டங்கள் ஆகியவற்றும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதேபோன்று, 1.3 லட்சம் கிராமப்புற வீடுகளில் வசிப்போர் பயன்பெறும் வகையில் உத்தரகாண்டின் 13 மாவட்டங்களில் ரூ.1,250 கோடி மதிப்பிலான 73 குடிநீர் வினியோக திட்டங்களுக்கான அடிக்கல்லையும் பிரதமர் மோடி இன்று நாட்டுகிறார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு