தேசிய செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் பயணம்: பிரியங்கா காந்தியை ஏற்றிச்சென்ற காங். நிர்வாகிக்கு ரூ.6100 அபராதம்

ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததற்காக பிரியங்கா காந்தியை ஏற்றிச்சென்ற காங். நிர்வாகிக்கு ரூ.6100 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில், கைதான முன்னாள் போலீஸ் அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரியை சந்திக்க நேற்று காரில் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை போலீசார் இரு முறை தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் அவர் காரில் இருந்து இறங்கி எஸ்.ஆர்.தாராபுரியின் வீட்டுக்கு நடந்து சென்றார். இதற்கிடையே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போலீசாரால் பிரியங்காவை பின் தொடர்ந்து செல்ல முடியவில்லை.

போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வேகமாக சென்ற பிரியங்கா காந்தி, கட்சி நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று எஸ்.ஆர்.தாராபுரியின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.

இந்த சம்பவத்தில் பிரியங்கா காந்தியும், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவரும் தலைக்கவசம் அணியவில்லை. இந்த சம்பவம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததற்காக பிரியங்கா காந்தியை ஏற்றிச்சென்ற காங். நிர்வாகிக்கு ரூ.6100 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை