வடக்கு கோவா,
ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் எகடெரீனா டிடோவா (வயது 34). இவர் ஆண் நண்பரான சக நாட்டை சேர்ந்த டெனிஸ் கிரியூசோகி (வயது 47) என்பவருடன் கோவாவுக்கு வந்துள்ளார். அவர் கோவாவின் வடக்கே சியோலிம் கிராமத்தில் வாடகைக்கு குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ந்தேதி அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி கோவா போலீசார் விசாரணை நடத்தினர். இதில், டிடோவாவுடன் வந்த டெனிஸ் தப்பியோடியது தெரிய வந்தது.
டெனிஸ், அதே குடியிருப்பில் வேறு தளத்தில் இருந்துள்ளார். சம்பவ நாளில் டிடோவா மது குடித்து விட்டு உறங்க சென்றுள்ளார் என கூறப்படுகிறது. அவரது மூக்கு, வாய் ஆகியவை அழுத்தப்பட்டு உள்ளது. தடயவியல் நிபுணர்களின் இறுதி அறிக்கைக்கு பின்பே மரணம் பற்றி தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தப்பி சென்று விட்டு கோவாவுக்கு திரும்பிய டெனிசை, போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.