தேசிய செய்திகள்

ரஷிய தடுப்பூசி, டெல்லிக்கு நேரடி சப்ளை; உற்பத்தி நிறுவனம் சம்மதித்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்

வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் தடுப்பூசிகளை இந்திய மாநிலங்களுக்கு நேரடியாக சப்ளை செய்ய மறுப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில், திடீர் திருப்பமாக ரஷிய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வியை உற்பத்தி செய்யும் நிறுவனம், டெல்லிக்கு நேரடியாக சப்ளை செய்ய சம்மதித்து இருப்பதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை சப்ளை செய்ய அதன் உற்பத்தி நிறுவனம் சம்மதித்துள்ளது. ஆனால் எவ்வளவு தடுப்பூசி வழங்குவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பொருத்தமானவை. அதனால் அவற்றை மத்திய அரசு கொள்முதல் செய்து குழந்தைகளுக்கு போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்