தேசிய செய்திகள்

பா.ஜனதாவிற்கு போட்டியாக காங்கிரஸ் வேட்பாளர் பேரணியில் காவி கொடி, ஜெய் ஸ்ரீராம் முழக்கம்

பா.ஜனதாவிற்கு போட்டியாக காங்கிரஸ் வேட்பாளர் பேரணியில் காவி கொடி ஏந்தப்பட்டு, ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்கப்பட்டது.

2019 தேர்தலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில், மலேகான் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பிரக்யா தாகூர் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இருவரும் யாகம் வளர்த்து பூஜை செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். திக் விஜய் சிங்கிற்கு ஆதரவாக பிரபல கம்ப்யூட்டர் பாபா நாம்தேவ் தியாகி பிரசாரம் செய்து வருகிறார்.

திக்விஜய் சிங் மற்றும் பாபா நாம்தேவ் தியாகி தலைமையில் போபால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பெரும் பேரணி நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கொடியுடன், காவி கொடியும் ஏந்தப்பட்டு இருந்தது. பின்னர் ஜெய் ஸ்ரீராம் முழக்கமும் முழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அதில் சாமியர்களும் கலந்து கொண்டார்கள். அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்றும் கூறிக்கொண்டனர்.

பா.ஜனதா வேட்பாளர் பிரக்யா தாகூருக்கு எதிராக, காங்கிரசுக்கு ஆதரவாக சாதுக்கள் பிரசாரமும் செய்து வருகிறார்கள்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு