தேசிய செய்திகள்

“ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம்” - மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டர் பதிவு

ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் 74-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில், இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்களின் ஒப்பிடமுடியாத தைரியமும் தேசபக்தியும் நம் நாடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ஆயுதப்படைகளுக்கு நான் அனுப்பிய செய்தியில், நம் தேசத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதில் அவர்களின் நேர்மறையான பங்கிற்கு எனது பாராட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆயுதப்படைகளை வலுப்படுத்தவும், அவர்களது குடும்பங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் அரசு செயல்படுகிறது என்றும் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்