புதுடெல்லி,
சி.பி.ஐ.யின் சிறப்பு இயக்குநராக ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் ஆஸ்தானா நியமிக்கப்பட்டார். இவர் சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குநராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்டெர்லிங் பையோடெக் என்ற நிறுவனத்தில் வருமான வரி துறையினர் மேற்கொண்ட சோதனையில் கிடைத்த டைரி ஒன்றில் ராகேஷின் பெயர் இருந்துள்ளது.
அதனால் அவரது நியமனம் சட்டவிரோதம் என கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலளிக்கும் வகையில் மத்திய அரசு, ராகேஷ் சிறந்த பணி அனுபவம் உள்ளவர். அவர், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல், நிலக்கரி ஊழல், கறுப்பு பணம் மற்றும் சட்டவிரோத பணபரிமாற்றம் உள்ளிட்ட 40 உயர்மட்ட அளவிலான வழக்குகளை கவனித்து வருகிறார் என்று தெரிவித்தது.
இந்த வழக்கு ஆர்.கே. அகர்வால் மற்றும் ஏ.எம். சாப்ரே அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அவர்கள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.