புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கு வெடிகுண்டு தயாரிப்புக்கு பின்னால் உள்ள சதிதிட்ட அம்சங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக அறிக்கையை தெரிவிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த அம்சங்கள் தொடர்பான மறு-விசாரணை மற்றும் மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவானது என்ன? விசாரணை முடிவை எங்களிடம் தெரிவியுங்கள். எங்களுக்கு அதுதான் வேண்டும், என ரஞ்சன் கோகாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர்நாராயணன் வாதாடுகையில்,
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதில் வெடிகுண்டு தயாரிப்பு பின்னணி சதிதிட்டம் தொடர்பாக சரியான விசாரணையானது மேற்கொள்ளப்படவில்லை உள்பட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினார். சுப்ரீம் கோர்ட்டு கண்ணி வெடிகுண்டு தொடர்பாக நடத்தப்பட்ட இப்போதையை விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு உள்ளது.
கூடுதல் செலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங், இவ்வழக்கில் விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது, சில குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகல் கூடுதல் காலம் எடுக்கும் என கூறிஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணையானது அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு கூறிஉள்ளது. ராஜீவ் கொலையில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கான பேட்டரியை பேரறிவாளன் வாங்கி கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை 2014ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு ஆயுள் தண்டனையாக குறைத்ததுடன், 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது. இதைத் தொடர்ந்து, 3 பேர் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது.
இதில் சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடைவிதித்தது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.