தேசிய செய்திகள்

கேரளாவில் 8-ம் வகுப்புக்கு நாளை பள்ளிகள் திறப்பு

கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 1-ந் தேதி, 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க கேரள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, கேரளாவில் நாளை முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், 15 ஆம் தேதி முதல் 9 மற்று, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநில பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்