படம்: ANI 
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கணவர் ; ராணுவத்தில் இணைந்தார் மனைவி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுந்தியாலின் மனைவி நிகிதா சவுல் நாட்டுக்காக பணியாற்ற ராணுவத்தில் இணைந்துள்ளார்.

புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதிமத்திய ரிசர்வ் போலீஸ் படை வீராகள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதி ஒருவா வெடிப்பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தை மோதச் செய்து நடத்திய தாக்குதலில் 40 வீராகள் பலியாகினா. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படை தாக்கி அழித்தது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் விபூதி சங்கர் தவுந்தியாலின் மனைவி நிகிதா சவுல் நாட்டுக்காக பணியாற்ற ராணுவத்தில் இணைந்துள்ளார்.

பயிற்சி முடித்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சியில், நிகிதா கவுல் ராணுவ உடையுடன் வந்து இந்திய ராணுவ வடக்கு கமாண்டர் ஜெனரல் ஒய்.கே.ஜோஷியிடம் நட்சத்திரத்தை அணிந்து கொண்டு முறைப்படி ராணுவத்தில் இணைந்துள்ளார்.

திருமணமாகி வெறும் 9 மாதங்களில் தனது கணவரை இழந்த நிகிதா, ராணுவத்தில் சேர்ந்ததன் மூலம் தனது கணவருக்கு உண்மையிலேய பெருமைப்படுத்தும் வகையில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

கணவரை இழந்ததும் துக்கத்தில் துவண்டுவிடாமல், ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டார். சென்னையில் இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சியைத் தொடங்கி, தற்போது ராணுவத்தில் இணைந்து இந்தியப் பெண்களின் வீரத்துக்கு உதாரணமாக மாறியுள்ளார் நிகிதா கவுல்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்