தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தில் டிரோன் மூலம் கடத்த முயன்ற ஹெராயின் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தில் டிரோன் மூலம் கடத்த முயன்ற ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகின்றன. இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இந்த கடத்தலை முறியடித்து வருகிறார்கள். இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எல்லை வழியாக போதைப்பொருட்களை கடத்துவது கடும் சவாலாக உள்ளது. தற்போது டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அட்டாரி பகுதியில் தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள அட்டாரி பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் பறந்துள்ளது. அதை இடைமறித்து கீழே இறக்கிய எல்லை பாதுகாப்புப்படையினர், டிரோனை சோதனையிட்டபோது அதில் 3.2 கிலோ அளவிலான ஹெராயின் இருப்பதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 2 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு