தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவு கோஷம்; இளைஞர்களை தூண்டும் பிரிவினைவாதிகள்: தர்கா தலைவர் கண்டனம்

பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்ப இளைஞர்களை தூண்டி விடும் காஷ்மீரி பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அஜ்மீர் தர்கா மத தலைவர் இன்று வலியுறுத்தியுள்ளார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரிலுள்ள அஜ்மீர் தர்காவில் சுபி துறவி மொய்னுதீன் சிஸ்டியின் குருவான உஸ்மான் ஹர்வானி பற்றி மத தலைவர் ஜெய்னுல் அபெடின் அலி கான் இன்று பேசினார்.

அவர், பாதுகாப்பு படைகள் மீது கற்களை வீசும்படியும் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பும்படியும் கூறும் காஷ்மீரி பிரிவினைவாதிகளை கடுமையாக சாடினார். இது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விசயம். இதனை நிறுத்த வேண்டும்.

பிரிவினைவாத தலைவர்கள் தங்களது மகன்களை கல்விக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், காஷ்மீரின் இன்றைய தலைமுறையினரை கல்வியில் இருந்து தொலைவில் நிறுத்தும் வகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் கல்வி நிறுவனங்களை சேதப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

இளைஞர்களை தவறாக வழிநடத்தும் அவர்கள் காஷ்மீரில் அமைதியின்மையை உருவாக்குவதற்காக தூண்டி விடுகின்றனர். சில அரசியல் கட்சிகள் காஷ்மீர் விவகாரத்தினை அரசியலாக்குகின்றனர். இது துரதிர்ஷ்ட விசயம் என்பதுடன் வெட்கப்பட வேண்டிய விசயமும் கூட என கூறியுள்ளார்.

காஷ்மீரில் வசிக்கும் பெருமளவிலான மக்கள் சுபியிசம் (இஸ்லாமிய மெய்ஞானத்திற்கு) ஆதரவு தருகின்றனர். ஆனால் அதற்கு அமைப்பு ரீதியிலான ஆதரவு இல்லை. அதனால் தீவிரவாதத்திற்கு எதிராக அவர்களால் செயல்பட இயலாமல் போகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்