தேசிய செய்திகள்

வாடகை காரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை?

வாடகை காரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

மடிவாளா:-

பெங்களூரு மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது நண்பர்கள் 3 பேருடன் நின்று கொண்டிருந்தார். அவர்கள் பி.டி.எம். லே-அவுட் செல்வதற்காக வாடகை கார் ஒன்றை பதிவு செய்து பயணித்தனர். காரை ராமாஞ்சனேயா (வயது 34) என்பவர் ஓட்டினார். அப்போது இளம்பெண்ணும், அவரது நண்பர்களுக்கும் காரில் இருந்தபடி புகைப்பிடித்ததாக தெரிகிறது. இதனால் டிரைவர் உடனே காரை நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் மற்றும் நண்பர்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது அந்த வழியாக ராந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது தனக்கு டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் கூறினார். மேலும், கார் டிரைவர், பண் உள்பட 4 பேரும் காரில் புகைப்பிடித்ததாக புகார் அளித்தார். 2 பேரிடமும் போலீசார் தனித்தனியே புகாரை பெற்று கொண்டனர். மேலும் இதுகுறித்து மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்