தேசிய செய்திகள்

டெல்லி திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் சசிதரூர் சந்திப்பு

டெல்லி திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், திஹார் சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 27 ஆம் தேதி வரை சிதம்பரத்திற்கு நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர், சிறையில் உள்ள சிதம்பரத்தை சந்தித்து பேசினார். சசிதரூருடன், ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்.பியுமான கார்த்திக் சிதம்பரம் மற்றும் மனிஷ் திவாரி ஆகியோரும் ப.சிதம்பரத்தை சந்தித்தனர்.

சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சசி தரூர், அரசியலமைப்பின் அடிப்படை கடமை மீறப்படுகிறது. 98 நாட்கள் சிறைவாசம் எதற்காக? ரூ. 9.96 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதற்காகவா…? இந்த வழக்கு சர்ச்சைக்குரிய பிரச்சினையும் அல்ல… இந்த செயல் மோசமான சமிக்ஞையை காட்டுகிறது.

மரியாதைக்குரிய நேர்மையான குடிமக்களை இப்படி நடத்தினால், உலகிற்கு மிகவும் மோசமான சமிக்ஞையை காட்டுகிறது. அவருடன் நாங்கள் இருக்கிறோம் என்ற ஒற்றுமையைக் காட்டவே நாங்கள் வந்தோம் என்றார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு