தேசிய செய்திகள்

கடுங்குளிரில் நடுங்கும் காஷ்மீர்; உறைநிலைக்கு கீழ் பதிவாகும் வெப்பநிலை

ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு வெப்பநிலை மைனஸ் 4.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.

ஸ்ரீநகர்,

இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் தற்போது கடுமையான பனிக்காலம் நிலவி வருகிறது. காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு பதிவானதிலேயே மிகக் குறைந்த அளவு வெப்பநிலை காஷ்மீரில் தற்போது காணப்படுகிறது.

காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு வெப்பநிலை மைனஸ் 4.8 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. அதிக குளிர் காரணமாக தண்ணீர் குழாய்களில் நீர் உறைந்து காணப்படுகிறது. இதே போல் காஷ்மீரில் உள்ள குல்மார்க், பராமுல்லா, பால்கம், குப்வாரா உள்ளிட்ட பகுதிகளிலும் உறைநிலைக்கு கீழ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்