தேசிய செய்திகள்

காதலியை மடியில் உட்கார வைத்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபர் - வீடியோ வைரல்

இளம்பெண், தனது காதலனின் தொடை மீது ஏறி அமர்ந்து கட்டியணைத்தப்படி இருந்தார்.

பெங்களூரு,

பெங்களூரு விமான நிலைய ரோட்டில் விபத்துகளை தடுக்க வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விமான நிலைய ரோட்டில் உள்ள எலகங்கா மேம்பாலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரு வாலிபர் தன்னுடைய காதலியை மடியில் அமர வைத்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றிருந்தார். அதாவது பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்திருந்த இளம்பெண், தனது காதலனின் தொடை மீது ஏறி அமர்ந்து கட்டியணைத்தப்படி இருந்தார். இதனை வாலிபருக்கு பின்னால் வந்த ஒரு வாகன ஓட்டி தனது செல்போனில் வீடியோ எடுத்திருந்தார்.

அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி எலகங்கா போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் வந்தது. அந்த வாலிபர் மற்றும் இளம்பெண் ஹெல்மெட் அணியாமலும், விதிமுறைகளை மதிக்காமலும் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, எலகங்கா போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சாம்புரா எம்.வி. லே-அவுட்டை சேர்ந்த சிலம்பரசன் (வயது 21) என்பதும், வாடகை கார் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சில்ம்பரசனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்