தேசிய செய்திகள்

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

காஷ்மீரில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர் இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள பதே கதால் பகுதியில், நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்க கமாண்டர் மெராஜூட் மற்றும் அவரது உதவியாளர் பைஸ் அகமது மற்றும் ரியாஸ் அகமது ஆகிய மூன்று பேரும் பாதுகாப்பு படையினரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து, காஷ்மீரில் இன்று முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்து இருந்தனர். பிரிவினைவாதிகளின் முழு அடைப்பால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

ஸ்ரீநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஸ்ரீநகரில் தனியார் வாகனங்கள் மட்டும் இயங்கியதை காண முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரமுல்லா மற்றும் பனிவால் இடையேயான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது வரை அங்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்