தேசிய செய்திகள்

ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய முதலீடுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்

ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய முதலீடுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.

கட்டுமானத்தொழிலில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோல் ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 49 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இது தவிர எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டிற்கான புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள அமைச்சரவை, முதல் கட்டமாக ரூ.3950 கோடியை அதற்காக ஒதுக்கீடும் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தின், தாவோஸில் நடைபெற உள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க செல்ல உள்ள நிலையில், இது போன்ற ஒரு திறந்த வெளி பொருளாதாரத்திற்கு இந்திய சந்தையை திறந்துவிட்டுள்ளது அரசு.

#FDI #Unioncabinet #Brandretail

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது