புதுடெல்லி,
நாட்டில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரையில் 18 கோடியே 70 லட்சத்து 9 ஆயிரத்து 792 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 96 லட்சத்து 85 ஆயிரத்து 934 சுகாதார பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 66 லட்சத்து 67 ஆயிரத்து 394 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
முன்களப்பணியாளர்களில் 1 கோடியே 46 லட்சத்து 36 ஆயிரத்து 501 பேர் முதல் டோசும், 82 லட்சத்து 56 ஆயிரத்து 381 பேர் 2-வது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர். 18-44 வயது பிரிவினர் 70 லட்சத்து 17 ஆயிரத்து 189 பேர் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
45-60 வயது பிரிவினர் 5 கோடியே 83 லட்சத்து 47 ஆயிரத்து 950 பேர் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றனர். 94 லட்சத்து 36 ஆயிரத்து 168 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 49 லட்சத்து 36 ஆயிரத்து 96 பேர் முதல் டோசும், 1 கோடியே 80 லட்சத்து 26 ஆயிரத்து 179 பேர் இரண்டாவது டோசும் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.