தேசிய செய்திகள்

அதிநவீன ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: கமல்நாத் உறவினரை கைது செய்ய தடை - டெல்லி கோர்ட்டு உத்தரவு

அதிநவீன ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், கமல்நாத் உறவினரை கைது செய்ய தடை விதித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக ரூ.3,600 கோடியில் அதிநவீன அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்குவதற்கு இத்தாலி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது.

இந்த ஊழலில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத்தின் நெருங்கிய உறவினரான ராதுல் புரி மீதும் புகார் எழுந்துள்ளது. அவர் ஏற்கனவே மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் முன் விசாரணைக்கு ஆஜர் ஆனார்.

இந்தநிலையில் அவர் முன்ஜாமீன் கேட்டு டெல்லி தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி இந்தர்ஜித் சிங் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது நெருங்கிய உறவினர் முதல்-மந்திரியாக இருப்பதாகவும், சமீபத்தில் 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள். காங்கிரசில் சேர்ந்த நிலையில் தன்னை திடீரென மத்திய அமலாக்கப்பிரிவு கைது செய்ய நினைப்பதாகவும் கூறி முன் ஜாமீன் கேட்டார்.

அதைத் தொடர்ந்து அவரை மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் 29-ந் தேதி (நாளை) வரை கைது செய்வதில் இருந்து தடை விதித்து நீதிபதி இந்தர்ஜித் சிங் உத்தரவிட்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு