தேசிய செய்திகள்

மொசாம்பிக்கில் புயல் பாதிப்பு: மீட்பு பணியில் 3 இந்திய கப்பல்கள் - 200 பேர் மீட்பு

மொசாம்பிக்கில் புயல் பாதித்த பகுதிகளில், மீட்பு பணியில் 3 இந்திய கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த 15-ந்தேதி, ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், ஜிம்பாப்வே, மலாவி ஆகிய நாடுகளை எல்டாய் புயல் தாக்கியது. இதனால், ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டன.

மொசாம்பிக் நாட்டின் வேண்டுகோளை ஏற்று, இந்தியா தனது 3 கடற்படை கப்பல்களை மொசாம்பிக் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. அக்கப்பல்கள் அங்கு மீட்பு மற்றும் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளன. சுமார் 200 பேரை மீட்டுள்ளன. இந்திய கடற்படை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிவாரண பொருட்களுடன் மற்றொரு கப்பலை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு