தேசிய செய்திகள்

தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காணவேண்டும் - பிரதமர் மோடிக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காணவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தெருநாய்களின் தொல்லை குறித்து கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமீபத்தில் ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் தெருநாய்கள் கடித்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ள அவர், இதில் உடனடி கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுவதை சுட்டிக்காட்டி, கருத்தடை பணிகள் தோல்வி அடைந்தது போலத் தெரிவதாகவும், எனவே மத்திய அரசு தெருநாய்களை கட்டுப்படுத்த ஒரு குழு அமைத்து தீர்வு காணவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்