கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக்கக்கோரிய வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக்கக்கோரிய வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது சுப்பிரமணியசாமி ஆஜராகி 'இந்த விவகாரம் கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மத்திய அரசு எவ்வித பதில் மனுவையும் தாக்கல் செய்யவில்லை' என வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த மனுக்கள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்