தேசிய செய்திகள்

கேரளா 'லவ் ஜிகாத்' வழக்கு ஹாதியாவிற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கேரளா லவ் ஜிகாத் வழக்கு தொடர்பாக விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஹாதியாவிற்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கே.எம்.அசேகன் என்பவரது மகள் அகிலா என்கிற ஹாதியா என்பவரை மதம் மாற்றி ஷபின் ஜகான் என்பவர் திருமணம் செய்தார். இத்திருமணத்தை எதிர்த்து அசேகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு இந்த திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்ததில் சந்தேகங்கள் உள்ளன. இதில் லவ் ஜிகாத் சதி இருக்குமே என்ற சந்தேகமும் எழுகிறது என்று கூறி திருமணத்தை ரத்து செய்தது. இதனையடுத்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டு சென்றது. ஹாதியா கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என அவருடைய தந்தையின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்படி ஹாதியா இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இருதரப்பு வாதத்தின் போது பேசிய ஹாதியா பேசுகையில், கடந்த 11 மாதமாக நான் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டு உள்ளேன். நான் ஒரு நல்ல குடிமகனாக, டாக்டராக இருக்க வேண்டும். என்னுடைய நம்பிக்கையை உண்மையாக நேசிக்க வேண்டும் என்றார். கேரள மாநில அரசின் செலவில் நீங்கள் படிப்பை தொடர விரும்புகிறீர்களா? என சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய கேள்விக்கு

நான் படிப்பை தொடர விரும்புகின்றேன், என்னுடைய கணவர் என்னை பார்த்துக் கொள்ள இருக்கும் போது மாநில அரசின் செலவில் படிக்க விரும்பவில்லை.என்றார்.

இதனையடுத்து ஹாதியா மருத்துவம் படிக்கும் சேலம் மருத்துவ கல்லூரியின் டீன் அவருக்கு பாதுகாவலராக இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ளவேண்டும். கல்லூரி நிர்வாகம் ஹாதியாவை விடுதியின் விதிகளின்படி மற்ற மாணவர்களை நடத்துவது போன்று நடத்த வேண்டும். கேரள போலீஸ் ஹாதியாவிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், அவர் சேலம் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக அரசு ஹாதியா மருத்துவ பயிற்சி காலமான 11 மாதங்கள் பாதுகாப்பை வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஹாதியாவுடன் நடைபெற்ற திருமணத்தை கேரளா ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷபின் ஜகான் தொடர்ந்த வழக்கு விசாரணை 2018-ம் ஆண்டு ஜனவரி மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்