தேசிய செய்திகள்

ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்த கேரள ஐகோர்ட்டு உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை

ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிட கேரள ஐகோர்ட்டு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கேரளாவை சேர்ந்த ஏ.என்.அனுராக் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் வி.கிரி ஆஜரானார்.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அரசு உதவி பெறும் பள்ளிக்கூட ஆசிரியர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதித்த கேரள ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்ததுடன், மனு தொடர்பாக கேரள அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்