தேசிய செய்திகள்

தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி

சந்திரசேகர ராவிற்கு அல்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஐதராபாத்,

தெலங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயிற்றுப் பகுதியில் தீடீர் அசவுகரியம் ஏற்பட்டதால், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சந்திரசேகர ராவிற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு அல்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாகவும், அதற்கான சிகிச்சைகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்