தேசிய செய்திகள்

திருப்பதி தேவஸ்தானத்தில் மதம் மாறியவர்கள் பணியாற்ற முடியாது; ஆந்திர அரசு முடிவு

திருப்பதி தேவஸ்தான பணிகளில் இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் நீடிக்க முடியாது என ஆந்திர மாநில முதன்மை செயலாளர் கூறியுள்ளார்.

ஆந்திர மாநில முதன்மை செயலாளர் எல்.வி. சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்து மதத்தில் இருந்து தற்போது மதம் மாறியவர்கள் அல்லது பணியில் இருப்பவர்கள் மதம் மாறினால் திருப்பதி தேவஸ்தானம், இந்து அறநிலைய துறை பணிகளில் நீடிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இந்து மத சம்பிரதாயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்க உள்ளதாகவும் கூறினார். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள், அந்த பணியில் இருப்பதை ஏற்று கொள்ள முடியாது என்றும் சுப்ரமணியன் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு