சிம்லா,
இமாசல பிரதேசத்தில் சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் நகரில் ஜியோரி பகுதியருகே இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, பெரிய பாறைகள் உருண்டோடி சாலையில் விழுந்துள்ளன. இதனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பினை முன்னிட்டு மூடப்பட்டது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி, தேசிய நெடுஞ்சாலை அமைப்பின் இந்திய தலைமை பொறியியலாளர் கூறும்போது, காலையில் இருந்தே பெருங்கற்கள் கீழே விழ தொடங்கின.
இதனால் நாங்கள் கூடுதல் போலீசாரை குவித்துள்ளோம். இன்று மாலை தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்படலாம் என கூறியுள்ளார். இமாசல பிரதேச அவசரகால மையம் வெளியிட்ட செய்தியில், நிலச்சரிவால் மனித உயிரிழப்புகளோ அல்லது பொருள் இழப்புகளோ ஏற்பட்டது போன்ற தகவலை தேசிய நெடுஞ்சாலை அமைப்பு வெளியிடவில்லை என்று தெரிவித்து இருந்தது.