டேராடூன்,
உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று பல பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டு உள்ளன.
இதனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், உத்தரகாண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தமி, கார்வல் பிரிவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியே சென்று இன்று பார்வையிட்டு உள்ளார்.