தேசிய செய்திகள்

நாட்டின் கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது - சத்யபால் மாலிக்

நாட்டின் கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஜம்மு,

நாட்டில் கவர்னர்களின் நிலை மிகவும் மேசமாக இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரில் ரியாசி மாவட்டம் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணதேவி பல்கலைக்கழகத்தில் 7-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கவர்னர் சத்யபால் மாலிக், கவர்னர் பதவி பலவீனமானது. பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்த முடியவில்லை. மனதில் இருப்பதை என்னால் பேச முடிவதில்லை. எனது வார்த்தை டெல்லியில் உள்ளவர்களை காயப்படுத்தாது என நம்புகிறேன். இதன் காரணமாக 3 நாட்கள் பயத்தில் இருந்தேன் என்று கூறினார். மேலும், நாட்டில் உள்ள வசதிபடைத்த மக்களில் ஒரு பிரிவினர் அழுகிய உருளைகிழங்கு பேன்றவர்கள். அத்தகைய மக்கள், யாருக்கும் உதவி செய்வதில்லை. அவர்கள் நாட்டின் கல்வி அமைப்பை மேம்படுத்த உதவ முன்வருவதில்லை என்றும் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு