தேசிய செய்திகள்

அயோத்தியாவில் ராமர் கோவில் கட்ட 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கிய ஜெயின் சமூகத்தினர்

குஜராத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினர் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர்.

ஆமதாபாத்,

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை ஆகஸ்டு 5ந்தேதி நடக்கிறது. பிரதமர் மோடி, முதலாவது வெள்ளி செங்கல்லை எடுத்து கொடுத்து அடிக்கல் நாட்டி வைக்கிறார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த அறக்கட்டளைக்கு நன்கொடை குவிந்து வருகிறது.

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வசித்து வரும் ஜெயின் சமூக மக்கள் இணைந்து, அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிக்காக 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர்.

இதனை ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி. பிரதிநிதிகளிடம் ஜெயின் சமூக சாமியார்கள் வழங்கியுள்ளனர். இதுபற்றி ஜெயின் சமூக சாமியார் ஒருவர் கூறும்பொழுது, அயோத்தியாவில் பெரிய அளவிலான ராமர் கோவில் கட்டப்படுவதற்கு, நாடு முழுவதுமுள்ள மக்களுடன் இணைந்து ஜெயின் சமூகத்தினரும் உற்சாகமடைந்து உள்ளனர்.

வரும் 5ந்தேதி, எங்களுடைய சமூகத்தினர் ஆயிரக்கணக்கான மந்திரங்களை ஓதுவோம். கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைய வேண்டும் என வேண்டி கொள்வோம். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், ஒட்டு மொத்த சமூகமும் தங்களது வீடுகளில் விளக்குகளை ஏற்றுவார்கள் என கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்