புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 26 பேர் கொண்ட 10-வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், மராட்டியத்தில் ஒருவரும், மேற்கு வங்காளத்தில் 25 பேரும் அடங்குவர். காங்கிரஸ் கட்சி இதுவரை 253 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து உள்ளது.
இதேபோல் ஒடிசா சட்டசபைக்கு 4 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கிறது.