தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு

எல்லை பாதுகாப்பு படையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

எல்லை பாதுகாப்பு படையில் இரண்டரை லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவற்றுடனான எல்லைகளை பாதுகாப்பதுடன், உள்நாட்டில் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

திரிபுராவில் உள்ள முகாமில், இந்த படையினரில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 10 பேர் வீரர்கள். மீதி 3 பேர், அவர்களின் குடும்பத்தினர் ஆவர்.

இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படையில் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இதில், 41 பேர் டெல்லி படைப்பிரிவை சேர்ந்தவர்கள். 24 பேர், திரிபுராவில் பணியாற்றுபவர்கள்.

ஒருவர், கொல்கத்தாவில் பணியாற்றுபவர். மற்றொருவர், விடுமுறையில் இருப்பவர் ஆவார். குறிப்பாக, டெல்லி ஜாமியா நகர், சாந்தினி மகாலில் மட்டும் அதிகபட்சமாக 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்