லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார். அவர் ராணி எலிசபெத் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தியபின், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டனில் இருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.