தேசிய செய்திகள்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இன்று டெல்லி வந்தடைந்தார்

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று மாலை டெல்லிக்கு வந்து சேர்ந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் இன்று மாலை தலைநகர் டெல்லிக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார். அவர் இந்தியாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பின்னர், அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும்.

இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை ஆண்டனி பிளிங்கன் சந்தித்து பேசுகிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த சந்திப்புகளின்போது இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் அடங்கிய குவாட் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, மின்னணு, புதுமை கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் ராணுவ துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்