தியோரியா,
உத்தரபிரதேச மாநிலம், தியோரியா மாவட்டத்தில், சதர் கோட்வாலி என்ற போலீஸ் நிலையம் இருக்கிறது. அங்கு சுலேகா காதூன் என்ற பெண் போலீஸ், 2 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் திடீரென அவர் தங்கி இருந்த அரசு காவலர் குடியிருப்பில் பிணமாக தொங்கினார்.
அவரது தந்தை இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், என் மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவள் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டு இருக்கிறார் என்று குற்றம்சாட்டி இருந்தார்.
அவரது புகாரின் பேரில், அதே போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் வீரேந்தர் கானுஜியா மற்றும் பாதுகாப்பு பணியில் உள்ள பெண் போலீஸ் பிரீத்தி யாதவ் மீது இந்திய தண்டனை சட்டம் 306-வது பிரிவின் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டது.