புதுடெல்லி,
தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏதும் இல்லை. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றுபட்டு உள்ளது. தேவைப்பட்டால், கூட்டணி கட்சிகளை சந்தித்து, மோடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்.
தெலுங்கு தேசம் மந்திரிகள் விலகினாலும், தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகவில்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால், புதிய பிரச்சினைகள் எழும். ஏனென்றால், பீகாரும் சிறப்பு அந்தஸ்து கேட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.