புதுடெல்லி
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சிகள் மக்களிடையே சென்று பேசுவதற்கான வாய்ப்பு கடினமாகி வருகிறது. இது போன்ற தணிக்கை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. இது இந்த அரசிற்கு அவமானகரமானது என்றார்.
திரிபுராவை ஆளும் இடதுசாரி அரசு சுதந்திர தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே முதல்வரின் பேச்சு அரசு தொலைக்காட்சியும், வானொலியும் பதிவு செய்துவிட்டன. ஆனால் ஒரு நாள் கழித்து கடிதம் ஒன்றை அனுப்பி உங்களுடைய பேச்சு சுதந்திர தினத்தின் புனிதத்தன்மை பொருந்துவதாக இல்லை என்பதால் தற்போதைய நிலையில் ஒளிபரப்ப முடியாது என்று தொலைக்காட்சி நிர்வாகம் கூறியது. இது பற்றி மாணிக் சர்க்கார் கூறுகையில், நெருக்கடி நிலை காலத்தில் இப்படித்தான் நடந்து வந்தது என்று குறிப்பிட்டார்.
மாணிக் சர்க்காரின் இப்பேச்சிற்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் பேச்சு அமைந்துள்ளது.