தேசிய செய்திகள்

தூதரை கலந்து பேசுவதற்காகத்தான் பாகிஸ்தான் அழைத்துள்ளது இந்திய வெளியுறவுத்துறை விளக்கம்

கலந்து பேசுவதற்காகத்தான் இந்தியாவுக்கான தூதரை பாகிஸ்தான் அழைத்துள்ளது. திரும்ப பெறவில்லை என வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி

டெல்லி சார்ந்த தூதரக அதிகாரிகளால் துன்புறுத்தல்கள் தொடர்பாக வியாழக்கிழமை பாகிஸ்தானின் உயர் ஆணையர் சோஹைல் மஹ்மூத்துக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்து உள்ளதாக இஸ்லாமாபாத்தில் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சம்பவங்களை இந்தியா கவனிக்கவில்லை என்று செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள எங்கள் உயர் ஆணையர் ஆலோசனைக்காக இஸ்லாமாபாத்திற்கு வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து வெளியுறவு அதிகாரி ரவீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது கலந்து பேசுவதற்காகத்தான் தனது தூதரை பாகிஸ்தான் அரசு அழைத்துள்ளது. தூதரை திரும்பப்பெறவில்லை. ஒருநாட்டுத்தூதரை கலந்து பேச அழைப்பது ஆரோக்கியமான நடைமுறைதான். இஸ்லாமாபாத்தில் எங்கள் ஆணையம் சுமூகமாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதிகாரிகள் எந்த தொந்தரவும் செய்யப்படவில்லை. அவர்களின் வேலை தடுக்கப்படவில்லை.என கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்