தேசிய செய்திகள்

நடிகையும்- எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதி

அதிகப்படியான மருந்தை உட்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு நடிகையும் - எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான். அதிகப்படியான மருந்தை உட்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 9:30 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகமும், காவல்துறையினரும் இந்த விஷயம் குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

சனிக்கிழமை தனது கணவர் நிகில் ஜெயின் பிறந்தநாளில் நுஸ்ரத் ஜஹான் நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இது குறித்து எம்பியின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, சுவாச பிரச்சினை காரணமாக நுஸ்ரத் ஜஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஆஸ்துமாவால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். அவர் விரைவாக குணமடைய விரும்புகிறோம் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம் என கூறி உள்ளார்.

நுஸ்ரத் ஜஹான் 2019ல் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தின் பசிர்ஹாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சயந்தன் பாசுவை விட 350,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்