தேசிய செய்திகள்

இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்குக்கு தடைகோரிய மனு விசாரணை 25-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்குக்கு தடைகோரிய மனு விசாரணை 25-ந் தேதிக்கு தள்ளிவைப்பு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு.

தினத்தந்தி

புதுடெல்லி,

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன், பி.குமார், மல்லிகார்ஜுனா உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.

டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக குற்றச்சாட்டை ஏற்ற விசாரணை கோர்ட்டு, மற்றவர்களை விடுவித்தது. பி.குமாருக்கு எதிராக விசாரணை கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி இடைக்கால தடைவிதித்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்குக்கு தடைகோரிய மனு மீதான விசாரணை, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் என். ஹரிகரன் உள்ளிட்டோர் ஆஜராயினர். மனுவைப் பரீசிலித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், இந்த விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை மார்ச் 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது