தேசிய செய்திகள்

மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி திருட்டு

பண்ட்வாலில் மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

 மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி பண்டாரிபெட்டு (வயது 60). இவர் நேற்றுமுன்தினம் கல்லிமாரி பகுதியில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்று இருந்தார். பின்னர் பொருட்களை வாங்கி விட்டு திரும்பி ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த ஆட்டோவில் அவருக்கு அருகில் 2 பெண்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அருகில் அமர்ந்திருந்த பெண்கள் கார்கல் பகுதியில் இறங்கினர். இதையடுத்து மீனாட்சி பண்ட்வால் பகுதியில் இறங்கிய போது அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை காணாமல் போய் இருந்தது. இதை கண்டு மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் இதுகுறித்து பண்ட்வால் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் போல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மீனாட்சியுடன் ஆட்டோவில் அருகில் அமர்ந்திருந்தவர்கள் தான் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்