ஐதராபாத்,
வயல்களில் பறவைகளின் தொல்லைகளை தவிர்க்கவும் சில இடங்களில் தேவையற்ற பார்வையை தவிர்க்கவும் விவசாயிகள் பொம்மைகளை வைப்பது வழக்கம். பொதுவாக வைக்கோல் துணைக்கொண்டும், பழைய மண்பானைகளை கொண்டும், பூசணிக்காயில் படம் வரைந்தும் திருஷ்டி பொம்மைகள் தயாரிக்கப்படும். இப்போது இதில் முன்நகர்வாக ஆந்திராவில் சன்னி லியோன் புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் வயலில் அதிக அளவில் காய்கறிகள் பயிரிட்டு உள்ள விவசாயி ஒருவர் ஆபாச நடிகை சன்னி லியோன் புகைப்படம் அடங்கிய போஸ்டர் வைத்து உள்ளார்.
பாண்டா கிண்டி பாலே கிராமத்தை சேர்ந்த விவசாயி செஞ்சு ரெட்டிக்கு அமெரிக்க ஆபாச நடிகை சன்னி லியோன் யாரென்று தெரியாது. ஆனால் அவர் தன்னுடைய பயிரை திருஷ்டியில் இருந்து காத்துக்கொள்ள அவருடைய புகைப்படம் அடங்கிய போஸ்டரை தன்னுடைய வயலில் வைத்து உள்ளார். அவருடைய தோட்டத்தில் காலிஃபிளவர் மற்றும் முட்டைக்கோஸ் பயிரிட்டு உள்ளார். அதனை கிராம மக்களின் தீய பார்வையில் இருந்து பாதுகாக்க சன்னி லியோன் படத்தை வைத்து உள்ளார்.
இதுதொடர்பாக விவசாயி கூறுகையில்,
இவ்வருடம் நான் 10 ஏக்கர் அளவில் பயிரிட்டு உள்ளேன். என்னுடைய தோட்டம் மீது கிராம மக்கள் மற்றும் அவ்வழியாக செல்பவர்களின் தேவையற்ற பார்வையானது தொடர்கிறது. தீய பார்வை தொடர்ந்து நடக்கிறது. இதுபோன்ற தீய பார்வையை நீக்கும் விதமாக சன்னி லியோனின் போஸ்டர் வைக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் திட்டமிட்டேன், அதன்படி நடவடிக்கையை மேற்கொண்டேன், என கூறிஉள்ளார்.
அழாதீர்கள் அல்லது என்னை பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள்,: என்ற வாசகம் போஸ்டரில் இடம்பெற்று உள்ளது.
என்னுடைய முயற்சியானது நல்லபடியாக பயன் அளிக்கிறது. தீய பார்வை கொண்டவர்களின் பார்வையை திசை திருப்புகிறது. இப்போது யாரும் என்னுடைய பயிரை பார்த்து திருஷ்டி போடுவது கிடையாது என மகிழ்ச்சியுடன் கூறிஉள்ளார்செ. ஞ்சு ரெட்டி. இதுபோன்ற ஆபசமான புகைப்படத்தை பொதுமக்கள் செல்லும் வழியில் வைத்து உள்ள விவசாயி தான் சட்டவிதிகளை மீறியதாக எதுவும் நினைக்கவில்லை,.
"எங்களுடைய பிரச்சினைகளை தெரிந்துகொள்வதற்கு எங்களுடைய இடத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை. பிறகு ஏன் அவர்களிடம் ஆட்சேபனை இருக்க வேண்டும்?" என கேள்வியை எழுப்பி உள்ளார் விவசாயி செஞ்சு ரெட்டி. அவருடைய திட்டத்தை பிற விவசாயிகளும் பயன்படுத்த முடிவு செய்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.