கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஆந்திரா, டெல்லி, மேற்கு வங்காளத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஆந்திரா, டெல்லி மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்குவங்காளம்

மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 5,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,42,830 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 95 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,555 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 10,512 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,11,573 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தற்போது 14,702 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆந்திரா

ஆந்திரமாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 8,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,79,773 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,696 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 12,292 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,64,082 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் தற்போது 1,03,995 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி

டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,30,128 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,704 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 752 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,00,913 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 4,511 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு