தேசிய செய்திகள்

”தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லப்பட்டது”: முரளி மனோகர் ஜோஷி

”தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று என்னிடம் சொல்லப்பட்டது” என்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கான்பூர்,

பாஜகவின் மிக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு, தற்போது வரை எந்த தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. ஏற்கனவே, அத்வானி போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் அமித்ஷா போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், கான்பூர் தொகுதி வாக்காளர்களுக்கு முரளி மனோகர் ஜோஷி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம்கோபால் என்னிடம் கான்பூர் அல்லது வேறு எந்த தொகுதியிலும் போட்டியிட வேண்டாம் என்று என்னை கேட்டுக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குஜராத் காந்திநகரில் கடந்த 5 முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக இருந்து வரும் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு இந்த முறை சீட் அளிக்கப்படவில்லை. அத்வானிக்கு 91வயது ஆகியதால், வயதுமூப்பு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல முரளி மனோகர் ஜோஷிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னதாக, உத்தரபிரதேச பாஜகவின் நட்சத்திர பிரசாரர்கள் பட்டியலிலும் இரு தலைவர்களின் பெயரும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்